Breaking

ஞாயிறு, 25 ஜூன், 2017

15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் அட்டகாசமான ஏசர் ஆஸ்பியர் விஎக்ஸ் 15.!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய லேப்டாப் தயாரிப்பாளர்களான ஏசர் நிறுவனம் தனது அடுத்த லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. மேலும் ஏசர் நிறுவனம் பல லேப்டாப் மாடலை வெளியிட்டுள்ளது, அந்த வரிசையில் தற்போது ஏசர் ஆஸ்பியர் விஎக்ஸ் 15 என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது.

தற்போது அறிமுகப்படுத்தபடும் இந்த லேப்டாப் பொறுத்தமட்டில் விளையாட்டு அம்சம் மற்றும் பல்வேறு மென்பொருள் அம்சங்கள் இவற்றில் புதுமையாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

15.6- இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேவுடன் ஏசர் ஆஸ்பியர் விஎக்ஸ் 15 வெளிவந்துள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கேமிங் மற்றும் வீடியோ போன்ற அனுமதிக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் தட்டச்சு பொறுத்தமட்டில் தனித்தன்மை கொண்டுள்ளது.
8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

ஏசர் ஆஸ்பியர் விஎக்ஸ் 15 பொறுத்தமட்டில் 8ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இன்டெல் கோர் ஐ7-7700எச்க்யூ7வதுஜென் இதில் இடம்பெற்றுள்ளது.
இணைப்பு சாதனங்கள்:

இணைப்பு சாதனங்கள்:

இதில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு சாதனங்கள் வைஃபை, ப்ளூடூத் 4.1, எச்டிஎம்ஐ, கிகாபிட் லேன், யுஎஸ்பி 3.0 போன்றவற்றை இவை ஆதரிக்கிறது. மேலும் இன்டர்நெட் பயன்பாடு போன்ற சிறப்பு அம்சங்களுக்கு இவை அருமையாக பயன்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராஃபிக்ஸ்:

கிராஃபிக்ஸ்:

டிடிஆர்5 நினைவகத்துடன் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 கிராபிக்ஸ் அட்டை இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு நினைவக ஆற்றல் உடன் இந்த லேப்டாப் கிடைக்கிறது. இதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கு தனிகவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பேட்டரி:

பேட்டரி:

4 மற்றும் 5 மணிநேரம் செயல்படும் விதம் இதில் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, புதிய அங்கீகார தொழில்நுட்பத்துடன் மேலும் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.90,000க்கு விற்ப்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக