சீனா தனது முதல் செவ்வாய் மற்றும் செவ்வாய் கிரக ரோவர் வடிவமைப்பு போன்ற விண்வெளி ஆய்வு சார்ந்த தகவல்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளது. சீனாவின் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது 2020-ஆம் ஆண்டின் மத்தியில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங்கில் வெளியான அறிவிப்பின் ஒரு பகுதியாக, சீன அதிகாரிகள் பிரயாண விண்கலத்தின் பெயர் மற்றும் லோகோ சார்ந்த ஒரு பொது போட்டி தொடங்கியும் உள்ளது.
தரவு :
அந்த ரோவர் ஆனது சிவப்பு கிரகத்தின் மண், வளிமண்டலம் பனிக்கட்டி அல்லது தண்ணீர் உட்பட மற்ற அம்சங்களை கண்டுபிடிக்கும், தரவுகளை அனுப்பும் என்று நம்பப்படுகிறது.
வெற்றி :
இதுவரை, அமெரிக்கா மட்டுமே வெற்றிகரமாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கியுள்ள ஒரே நாடாகும், மறுபக்கம் அடுத்ததாக ஒரு கூட்டு ஐரோப்பிய - ரஷியன் பணி நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய பிரிட்டிஷ் தலைமையிலான முயற்சி தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுப்பாதை :
எப்படி பார்த்தாலும் அமெரிக்கா, ரஷ்யா/சோவியத் ஒன்றியம், ஐரோப்பா மற்றும் இந்தியாவை தொடர்ந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும் ஐந்தாவது நாடாக சீனா திகழலாம்.
குவாண்டம் இயற்பியல் :
கடந்த ஆகஸ்ட் 16 அன்று குவாண்டம் இயற்பியல் செயல்படுத்தல் செயற்கைக்கோள் முன்மாதிரியை சோதனை செய்து தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது.
ஜேட் ரேப்பிட் லூனார் :
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதன் ஜேட் ரேப்பிட் லூனார் ரோவர் ஆனது 31 மாத கால நிலவு ஆராய்ச்சிக்கு பின்னர் 'ஷட் டவுன்' செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரேடியோ தொலைநோக்கி :
வெற்றிகரமாக நிலவில் ஒரு ரோவரை தரையிறக்கிய மூன்றாவது நாடாக சீனா திகழ்கிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா கட்டமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக