Breaking

ஞாயிறு, 25 ஜூன், 2017

ரூ.5,999/-க்கு இந்தியாவில் ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 9 கேமரா.!

இந்தியாவில் அதிகப்படியான கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது, அதிலும் ஃபுஜிஃபில்ம் போன்ற கேமரா அனைத்து இயற்க்கை பகுதிகளிலும் மற்றும் பல்வேறு பயனங்களிலும் அதிகமாகப் பயன்படுகிறது.
தற்போது இந்நிறுவனம் ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 9 இன்ஸ்டன்ட் கேமரா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அனைத்து மக்களையும் கவரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, இந்த அட்டகாசமான கேமரா.

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 9:

ஃபுஜிஃபில்ம் இன்ஸ்டாக்ஸ் மினி 9:

இந்த புதிய கேமரா ஃப்ளெமிங்கோ பிங்க், லைம் பசுமை, கோபால்ட் ப்ளூ, ஸ்மோக் ஒயிட் மற்றும் ஐஸ் ப்ளூ உட்பட ஐந்து புதிய நிறங்களில் வருகிறது. மேலும் உடனடியான எந்தபோட்டோவையும் பிரிண்ட் எடுக்க கூடிய வசதி இதனுள் செய்து தரப்பட்டுள்ளது.
ஃப்ளாஷ் :

ஃப்ளாஷ் :

இந்த கேமரா 1/10 இரண்டாவது ஷட்டர் வேகத்தைக் கொண்டுள்ளது, மேலும் 0.6 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரையிலான சிறந்த ஃப்ளாஷ் வரம்புகளைக் கொண்டுள்ளது.
 துல்லியமான லென்ஸ்:

துல்லியமான லென்ஸ்:

இன்ஸ்டாக்ஸ் மினி 9 பொறுத்தமட்டில் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இயற்க்கைகாட்சிகளை
படம்பிடிக்க உதவும் எனக் கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களுடன் கூடிய புகைப்படங்களை எடுக்க இதனுள் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
 பேட்டரி:

பேட்டரி:

இந்த கருவி இரண்டு ஏஏ அளவிலான 1.5 வோல்ட் கார்பரேட் பேட்டரிகளில் இயங்குகிறது, மேலும் 100க்கு மேல் மிக அருமையாக புகைப்படம் எடுக்க உதவுகிறது. இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூ.5,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக