ஸ்டோன்ஹெஞ்ச் என்பது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் கொண்ட இதை பெருங்கற்கள் (megalith) என்றும் அழைப்பார்கள், இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும்,
பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த அமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
அப்படியான 5000 ஆண்டுகள் பழமையான ஸ்டோன் ஹெஞ் சார்ந்த விளக்கத்தை முதன்முதலாக பிரிட்டனின் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சூரியன் மற்றும் சந்திரன் :
அதாவது இந்த பெரிய கல் அமைப்பானது குறிப்பாக சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களை மையமாக கொண்டு கட்டப்பட்டுள்ளனவாம்.
கற்பனை :
இதற்கு முன் யாரும் வானவியலை மனதில் கொண்டு ஒரு புள்ளிவிவர கல் வட்டம் கட்டப்பட்டது என்பதெல்லாம் ஒரு கற்பனையாகவே இருந்தது.
500 வருடங்கள் :
ஸ்டோன்ஹென்ஜ் போன்றே ஸ்காட்லாந்தில் கட்டப்பட்டுள்ள 500 வருடங்கள் பழமையான இரண்டு பெரிய கல் வட்டங்களை (Callanish on the Isle of Lewis, and Stenness on Isle of Orkney) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
சோதனை :
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 2டி மற்றும் 3டி தொழில்நுட்பம் பயன்படுத்தி கற்களின் சீரமைப்பு அமைப்புகளின் அளவுகளை சோதனை செய்துள்ளனர்.
கூட்டு செறிவு :
அந்த ஆய்வின் மூலம் சூரியன் மற்றும் சந்திரனின் வெவ்வேறு சுழற்சி நேரங்களின் கூட்டு செறிவு அந்த கல் அமைப்புகளில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எதோ ஒரு வகையில் :
இந்த கற்கள் நேரடியாக சூரியன் மற்றும் சந்திரனுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிற போதும், இந்த சிக்கலான கல் அமைப்புகள் சூரிய மற்றும் சந்திர இயக்கங்களுடன் எதோ ஒரு வகையில் சம்பந்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
வானம் மற்றும் பூமி :
இந்த ஆராய்ச்சி மூலம் 2000 ஆண்டுகளாக இதே நடைமுறையில் தொடர்ச்சியாக பண்டைய பிரிட்டன் மக்கள் வானம் மற்றும் பூமியுடன் ஆன இணைப்பில் இருந்துள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட சூழல் :
கல் அமைப்பு கட்டப்பட்டுள்ள இந்த தேர்வு செய்யப்பட்ட சூழல் ஆனது குறிப்பாக சூரிய மற்றும் சந்திர உதயம் - மறைவு மற்றும் சில சிறப்பு நேரங்களை காண வழி வகுத்திருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக